அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் வெளியானது

0
6

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் திகதி விபத்தில் சிக்கியது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர்.

மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் உயிரிழந்திருந்தனர்.இதற்கமைய அந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டிருந்தது. அதன்படி விமான விபத்து புலனாய்வுப் பணியகம்,முதல்கட்ட அறிக்கையை கடந்த 8-ம் திகதி மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்தது.

இந்நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12ம் திகதி) நள்ளிரவு வெளியானது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளது.

சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான இயந்திரங்களில் (என்ஜின்) எரிபொருள் விநியோகம் தடைபட்டது. இதனால் என்ஜின்களின் சக்தி குறைந்தது. விமானி ஒருவர் மற்ற விமானியிடம், “ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?” என்று கேட்டதாகப் பதிவாகி உள்ளது. அதற்கு மற்ற விமானி. “நான் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.

இந்த கட்டளையற்ற நிறுத்தம் ராம் ஏர் டர்பைனின் (RAT) நிலைநிறுத்தத்தைத் தூண்டியது. மேலும் விமானம் உடனடியாக உயரத்தை இழக்கத் தொடங்கியது, அதேவேளை இயங்கும் மற்றும் பறக்கும் கட்டுப்பாட்டை தக்கவைக்க முடியவில்லை.

விமானிகள் இரண்டு இயந்திரங்களையும் மீண்டும் இயக்கும் முயற்சியில் எரிபொருள் சுவிட்சுகளை மீண்டும் இயக்கினர். என்ஜின் 1 தானாகவே மீண்டும் இயங்க முயற்சித்தது. அது வெற்றிகரமாக இயங்கியது. ஆனால் என்ஜின் 2-வை மீண்டும் இயக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால், அவசரகால மின்சக்தி ஆதாரமான ராம் ஏர் டர்பைன் (RAT) தானாகவே இயங்கியது.

180 நாட் வேகத்தை சிறிது நேரம் எட்டிய விமானம் கீழே இறங்கி, மீண்டும் உயரத்தை அடைய தவறிவிட்டது. இறுதி துயர அழைப்பு – “மே டே” -விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் விமானம் மோதியதற்கு சில வினாடிகளுக்கு முன்பு. UTC 08:09 மணிக்கு அனுப்பப்பட்டது.

விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்தன. ஆனால் விபத்துக்குப் பிறகு எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்தன. இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதியாகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன.

விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category C Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா. விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here