யாழ் நகரை பிறப்பிடப்பிடமாகவும் தலவாக்கலை கதிரேஷன் கோவிலின் பிரதம குருக்களுமாகிய பிரசாந்த் சர்மா நுவரெலியா மாவட்ட நீதவான் ஜீ.ஜீ.ஜீ.ஜயசிங்ஹ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
இவர் முத்துசாமி ஐயர்,சந்திரகுமாரி ஆகியோரின் புதல்வரும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ வித்தியா குருகுலத்தில் வேதாகம கல்வியை கற்றவர் ஆவார்.
மேலும் சர்வதேச இந்துமத பீடத்தின் நிர்வாக உறுப்பினரும்,நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழு தேசிய சமாதான பேரவையின் செயற்குழு உறுப்பினரும்,கருணை இல்லத்தின் நிதிச்செயலாளரும் ஆவார்.
நீலமேகம் பிரசாந்த்