அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சுயத்தொழில் வாய்ப்பினை ஊக்குவிக்கும் முகமாகவும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவும் அக்கரப்பத்தனை பிரதேசசபைக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் ஆடைத்தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரின் ஆலோசனைக்கு அமைவாக இவ்வாடைத்தொழிற்சாலை அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்ச்செல்வன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்ச்செல்வன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் ,இதொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன், அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் மற்றும் பல இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்