அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 101 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன.
கடந்த அரசாங்கத்தின் போது கட்டப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத நிலையில் முழுமைப்படுத்தடாமல் காணப்பட்ட வீடுகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதிக்கீட்டில் பல கோடி ரூபா செலவில் முழுமைப்படுத்தப்பட்டு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டன.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பழனி சக்திவேல்,அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன், இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன்,அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்