அசாதாரண மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி ஹட்டனில் போராட்டம் ஒன்று நேற்று26 மாலை 6.45 மணியளவில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.
போராட்ட காரர்கள் கையில் தீப்பந்தங்களையும் ரணில் செல்கிறார் சவாரி மக்களுக்கு மின்சார தாக்கம். வருடத்தில் மூன்று கட்டண அதிகரிப்பு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டனர்
ஆர்ப்பாட்டகாரர்கள் சர்வதேச நாணய நிதியத்தினை மகிழ்விப்பதற்கு அரசாங்கம் மூன்று முறை மின் கட்டணத்தினை அதிகரித்துள்ளதாகவும்,மக்கள் பசி பட்டினியில் வாடும் நிலையில் ஜனாதிபதி ரணில் சவாரி செல்கிறார் எனவும் இவர்களின் செலவுகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவர்கள் கோசமிட்டனர்;.
தேசிய மக்கள சக்தி ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 50 பேர் வரை கலந்து கொண்டிருந்ததுடன் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை இடம்பெற்று ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
மலைவாஞ்ஞன்