அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என World Action Foundation னின் ஸ்தாபகரும், கனடாவில் வாழும் மலையகத் தமிழரான சுபாஷ் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
” மலையக குயில்” அசானியின் சொந்த ஊரான புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
Lanka Vision Action Foundation ஊடாக மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை இவர் முன்னெடுத்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இருந்து காணொளி ஊடாக, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக தோட்ட ஆலயத்தை குறுகிய காலப்பகுதிக்குள் புனரமைத்துக்கொடுப்பதற்கு அவர் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.