அஞ்சல் ஊழிய பிரதிநிதிகளுக்கும் ஊடக அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்

0
5

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களுக்கும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று (24) விசேட கலந்துரையாடல் நடை பெறுகிறது.

இந்த கலந்துரையாடலுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீர்க்கப்படாத 19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணி (UPTUF) உட்பட பல தொழிற்சங்கங்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) தொழிற்சங்க போராட்டம் தொடங்கப்பட்டது.

இன்று ஏழாவது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.

இதன் விளைவாக,நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல அஞ்சல் அலுவலகங்களில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. அஞ்சல் சேவைகளைப் பெற வந்த மக்கள் கு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார, இன்று அமைச்சருடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஏராளமான அஞ்சல் ஊழியர்கள் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளனர் என்றும், நாளைக்குள் அஞ்சல் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜெகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here