அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதால் பரபரப்பு-

0
118

கம்பளையில் உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டு  மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை  பார்த்த  உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது,

கம்பளை பஸ் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கம்பளை, மேரிவில வத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர் வைத்தியசாலைக்குச் சென்று 59 வயதுடைய மகனின் சடலம் என கூறி குறித்த சடலத்தை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தினர் மரணச் சடங்குகள் செய்து சடலத்தை  அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் சம்பவம் குறித்து அவருக்குத் தெரிவித்து  மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here