அட்டன் நகரில் மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்ட இடத்தில் அமைதியின்மை

0
168

16 நாள்களுக்குப் பின்னர் அட்டன் நகரில் இன்று (26) மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்ட போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 3,300 லீற்றர் மண்ணெண்ணையே விநியோகிக்கப்பட்ட நிலையில், இதனைப் பெறுவதற்காக, அதிகாலை தொடக்கம் ஆயிரக் கணக்கான மக்கள் வரிசைகளில் நின்றனர்.

இதன்போது, தலா ஒருவருக்கு 150 ரூபாய்க்கு, ஒன்றரை லீற்றர் மண்ணெண்ணையே விநியோகிப்பட்டதால், நுகர்வோருக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரால் நிலைமை சுமூகமாக்கப்பட்டது.

இதேவேளை சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்தி, மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதாகவும் வரிசையில் நின்ற பலர் குற்றஞ்சுமத்தினர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here