அணு ஆயுத வரம்புகளை ரஷ்யா பின்பற்றும்!

0
199

அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா- ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என ரஷிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் புடின் குறிப்பிட்டார்.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்போது புடின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here