’அண்ணாத்த’ படத்திற்கு கீர்த்தி சுரேஷின் சம்பளம் இத்தனை கோடியா?

0
211

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தங்கை வேடத்தில் நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷ் தயக்கம் காட்டியதாகவும் அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கை கேரக்டர் என்பதாலும் சம்பளம் அதிகம் என்பதாலும் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது

தங்கை கேரக்டரில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபாய்தான் சம்பளம் வாங்கி வருகிறார் என்றதும் தங்கை கேரக்டரில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here