அண்ணாத்த படப்பிடிப்பில் கடைசி நாளில் மனம் திறந்த ரஜினி….!

0
293

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று கடந்த பல வருடங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில், கடைசி நாளில் அனைவருடனும் மனம் திறந்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது :

” மேலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கு உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகே அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன்.

அண்ணாத்த படம் என் திரைப்பயணத்தில் முக்கியமானதாக இருக்கும். இப்படத்தை எப்படியாவது முடித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. இப்போது அண்ணாத்த திரைப்படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது.

எல்லோரும் வீட்டுக்கு போய் பத்திரமா இருங்க. மீதி இருக்கும் பணிகளை கொரோனா குறைந்த பிறகு செய்யலாம் ” என்று உருக்கமாக பேசியுள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here