அதி உயர் வலையங்கள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது!

0
235

கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெளியிட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் பிரதமர் அலுவலகம் அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையால் இலங்கையில் அசாதாரண நிலை இன்னும் காணப்படுவதாக சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனவே இவ்வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டமையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச உதவிகள் கிடைப்பது தாமதமாகும்.எனவே நாட்டின் நலன்கருதி சர்வதேச ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மீள் பெற்றிருந்தமை வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here