அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

0
2

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நேற்று வியாழக்கிழமை (19) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாவையிலிருந்து கெலவரபிட்டிய நோக்கி பயணித்த லொறி ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here