அத்தியாவசிய பொருட்கள் பின்கதவிலும் அதிவிவேசம் முன்கதவிலும்.

0
157

நாட்டின் பாராளுமன்ற அமர்வு 22/09/2021 புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் உரையாற்றுகையில் அத்தியாவசிய பொருட்கள் பின் கதவிலும் அதிவிசேஷம் முன்கதவிலும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்…..

பாதுகாப்பு பாவனையாளர் அதிகார சபை ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட மூலத்தின் அடிப்படையில் முதலாவதாக அதிகமாக பொருட்களின் விலையை விற்பவர்களுக்கு தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பொருட்களை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டிலேயே பல்வேறு பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீமெந்து, பால்மா, கேஸ் போன்றவற்றிற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் கடை உரிமையாளர்கள் பொருட்கள் கிடைப்பதில்லை அதனால் விற்பதில்லை என குறிப்பிடுகின்றனர். அதேபோல 108 ரூபா அரிசியை 98 ரூபாவிற்கு விற்பனை செய்ய எத்தணிப்பதால் அதை விற்னை செய்ய அஞ்சுகின்றனர். எனவே அரிசி தட்டுபாடும் கடைகளில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இருப்பக்கமும் ஆராய்ந்து சட்டங்களை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசி அனைவருக்கும் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும். இப்படி இருக்கையில் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை வழங்குகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தடுப்பூசிகள் நன்மையா என்பதை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவே தீர்மானிக்கப்பட வேண்டும். இருந்தாலும் கூட தடுப்பூசிகளால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவுடனான சுமூகமான உறவை பேணியிருந்தால் இந்தியா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருக்கும். ஒரே நாளில் 22 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்றிய இந்திய அரசாங்கத்துக்கு இலங்கைக்கு தடுப்பூசி வழங்குவதில் எவ்வித சிரமமும் இருந்திருக்காது என இந்தியாவுடனான சுமூகமான உறவை பேண வேண்டுமென தன் உரையில் வழியுறுத்தினார்.

இதைத்தவிர ஆசிரியர் போராட்டம் உட்பட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here