அந்தோனியார் திருச்சொரூபங்கள் இரண்டு உடைப்பு

0
187

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜிவத்தை பகுதியில் பல வருடங்களாக காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொக்குப்படையான் கிராம மக்கள் கஜிவத்தை பகுதியில் பல வருடங்களாக காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆராதனைகளை மேற்கொள்ள சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here