அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்ட கடைகள் பொலிஸாரால் பூட்டு.

0
160

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்டிருந்த சகல அத்தியாவசிய கடைகளையும் பூட்டுமாறு பொலிஸார் இன்றுமாலை 15.06.2021 உத்தரவிட்டனர்.

கடந்த சில தினங்களாக அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் வாகனங்களும் நகருக்கு வருகை தந்துள்ளன. இதனால் தனிமைப்படுத்தல் சட்டங்கள் கடைபிடிக்காத நிலையில் காணப்பட்டன. இதனை கருத்திற்கொண்டு அனுமதிப்பத்திரம் இல்லாத கடைகள் மூடப்பட்டதுடன் அத்தியாவசிய தேவைகள் இன்றி வருகைதந்த முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன.

எதிர்வரும் தினங்களில் அனுமதிப்பத்திரமின்றி கடைகள் திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here