நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக் குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அத்துடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாது, சிறுவர்கள் ஆரம்பத்திலிருந்தே சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பிறப்புச் சான்றிதழ்களின் அவசியம் தொடர்பில் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ்களை விரைவாக வழங்க மாவட்ட பதிவாளர் பிரிவுடன் இணைந்து நடமாடும் சேவை அலகுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.