அனைத்து நெருக்கடிகளையும் தீர்ப்பேன்! -பசில்

0
133

நாட்டில் ஏற்பட்டுள்ள சகல பொருளாதார நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு தனக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரமித பண்டார தென்னகோன், எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நிதியமைச்சர் இந்தப் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஓராண்டு கால அவகாசம் கோரியுள்ளார். இந்த வருடத்திற்குள் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என நிதியமைச்சர் பின்வரிசை உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here