தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்களில் ஒருவரும் கொத்மலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சமுர்த்தி உத்தியோகஸ்தருமான அமரர். சின்னையா கனகசபை அவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் றம்பொடை வேவண்டன் தோட்டத்திற்குச் சென்று இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரின் பூதவுடலுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொடி போர்த்தப்பட்டு கெளரவம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல்
சோ. ஸ்ரீதரன்