ஹொக்கி போட்டிகளின் போது அமெரிக்க தேசிய கீதத்திற்கு எதிராகக் கூச்சலிட்டு அவமதிப்பதைத் தவிர்க்குமாறு கனடாவின் முன்னாள் இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான நட்புறவை நாம் “முற்றாக முறித்துக் கொள்ளக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
University of Ottawa நிகழ்வொன்றில் பேசிய ஓய்வுபெற்ற ஜெனரல் WayneEyre, அமெரிக்காவுடனான உறவு தற்காலத்தில் சவாலானதாக மாறியிருந்தாலும், தற்போதுள்ள கூட்டணிகளை நாம் கண்மூடித்தனமாக நிராகரித்துவிடக் கூடாது என்றார்.
அமெரிக்க அதிபர் Donald Trump கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவது குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, கனடிய விளையாட்டு ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதத்திற்கு எதிராகக் கூச்சலிட்டுத் தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
CUSMA எனப்படும் வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா மறுத்து வரும் நிலையில், சீனா பக்கம் சாய்வதற்கும் Wayne Eyre எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்க மக்களையும் அவர்களது அரசாங்கத்தையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்றும், நட்பு நாடுகளை நமக்கு எதிராகத் திருப்பக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




