அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கெர் கௌண்டி பகுதியில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தால் பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 20 குழந்தைகள் காணாமல் போனதை உறுதிப்படுத்திய டெக்சாஸ் மாநில பதில் ஆளுநர் டான் பெட்ரிக் மேலும் பலரைக் காணவில்லை என தெரிவித்துள்ளார்.
“45 நிமிடங்களுக்குள், குவாடலூப் நதி 26 அடி உயர்ந்து, அது ஒரு அழிவுகரமான வெள்ளம், சொத்துக்களையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் அது பறித்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 750 குழந்தைகள் கலந்து கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.
குழந்தைகள் பெற்றோரைத் தொடர்பு கொள்ளாவிட்டால், அவர்களின் குழந்தையும் காணாமல் போனதாக கணக்கிடப்படும்.
பொது மக்களை மீட்க14 ஹெலிகாப்டர்கள், 12 ட்ரோன்கள், ஒன்பது மீட்புக் குழுக்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் உள்ளனர், சுமார் 400-500 பேர் அந்த பகுதியில் உள்ளனர்இரவு முழுவதும் தேடுதல் தொடரும் என்று மற்றொரு அதிகாரி உறுதிப்படுத்தினார்.