அமெரிக்காவை தாக்க ஏவுகணைகளை தயார்படுத்தும் ஈரான் – நியுயோர்க் டைம்ஸ்!

0
5

இஸ்ரேல் ஈரான் யுத்தத்தில் அமெரிக்கா இணைந்துகொண்டால் மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக ஈரான் ஏவுகணைகளையும் ஏனைய போர்த்தளபாடங்களையும் தயார்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் அதிகாரிகள் தங்களிற்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்

அமெரிக்கா 36 மீள்நிரப்புவிமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது இந்த விமானங்களை அமெரிக்க தளங்களை பாதுகாக்கும் ஜெட் விமானங்களின் உதவிக்கு பயன்படுத்தலாம்.

இதேவேளை இந்த விமானங்களை ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதலிற்கும் பயன்படுத்தலாம்.

ஈரானுடனான மோதலில் அமெரிக்கா தலையிடவேண்டும் என இஸ்ரேல் அழுத்தம் கொடுத்துவருவதால் பரந்துபட்ட யுத்தம் குறித்த அச்சங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் அதிகரிக்கின்றது.

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் முக்கிய அணுஉலையான போர்டோ மீது தாக்குதலை மேற்கொண்டால் ஈரான் ஆதரவு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்களை நிச்சயமாக மீண்டும் தாக்கதொடங்குவார்கள் இஎன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுதகுழுக்கள் அமெரிக்க தளங்களை தாக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவும் இணைந்து தாக்கினால்இபாரசீக வளைகுடாவில் அமெரிக்க கப்பல்களை தடுத்து நிறுத்துவதற்காக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை புதைக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் உள்ள அமெரிக்க படையினரை தளபதிகள் உசார்நிலையில் வைத்துள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியம் ஜோர்தான் சவுதி அரேபியா உட்பட மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் 40இ000 படையினர் உள்ளனர்.

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு தாக்கினால் ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கும் முதலில் ஈராக்கில் உள்ள தளங்களை தாக்கும் என்பதை இரண்டு ஈரானிய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அராபிய நாடுகளில் உள்ள எந்த தளத்தையும் ஈரான் தாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவதாக்குதல் மூலம் தீர்வினை காணமுடியாது என்பதையும்இதங்கள் விருப்பத்தை ஈரானிய மக்கள் மீது திணிக்க முடியாது என்பதையும் எங்கள் எதிரிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என ஈரானின் வெளிவிவகாரஅமைச்சர் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

யுத்தம் விரிவடைந்தால் இஸ்ரேலினையும் அதற்கு ஆதரவு வழங்குபவர்களையும் குற்றம்சாட்டவேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்களுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார் என ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்குவதற்கு ஈரான் அதிகளவில் தயாரிப்புகளில் ஈடுபடவேண்டியதில்லைஇ பஹ்ரைன் கத்தார் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்ககூடிய எல்லைக்குள் ஈரானின் ஏவுகணைகள் உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கப் படைகள் போரில் சேரும் வாய்ப்பு சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளதுஇ மேலும் ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளது.

ஃபோர்டோ மீதான தாக்குதல் ஈரானின் அணுசக்தி திறன்களுக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் அல்லது அது ஒரு ஆயுதத்தை உருவாக்குவதை எவ்வளவு காலம் தாமதப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஈரானின் தற்போதைய செறிவூட்டப்பட்ட யுரேனியக் கிடங்கு நாட்டின் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை இன்னும் கணிசமாக சேதப்படுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படும் என்று பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரைவழியாக ஈரானுக்குள் செல்லும் இஸ்ரேலிய கமாண்டோக்களுக்கு வான் பாதுகாப்பு வழங்குவதும் அமெரிக்க உதவியில் அடங்கும். ஆனால் அதிக சாத்தியமான விளைவு மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டருடன் ஆயுதம் ஏந்திய அமெரிக்க டீ-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களின்

ஆனால் மிகப்பெரிய ஓர்டினன்ஸ் பெனெட்ரேட்டர் என்ற ஆயுதம் தாங்கிய யுஎஸ் பி2 அதி நவீன டீ-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம், அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலத்தடி போர்டோ வசதியை பாதுகாக்கும் மலைக்குள் துளையிடும் திறன் கொண்ட ஒரு ஆயுதம்.ஓர்டினன்ஸ் பெனெட்ரேட்டர் அமெரிக்கா அல்லது அமெரிக்க உதவியுடன் ஃபோர்டோ மீது எந்தவொரு தாக்குதலும் ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் பதிலடி கொடுக்கத் தூண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here