அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து தமக்கு அமைச்சராக கடமையாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல முக்கிய கட்சிகள் தற்போது கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி வருகின்றன.
நேற்றைய தினம் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சின் பணிகளை மீண்டும் தொடரப்போவதில்லை என தெரிவித்தார்.
எனினும், அவர் பதவி விலகுவாரா? என்பது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.