அமைச்சர் லால் காந்தவின் தவறுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – தம்மரத்ன தேரர்

0
4

அமைச்சர் லால் காந்த பிக்குகளை வனவாசி கள் என்று விமர்சித்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மஹாசங்கத்தினரிடம் சென்று இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் லால் காந்த போன்ற நபர்களுக்கு விளக்கம் கொடுப்பதில் பயனில்லையென்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘லால் காந்த தேரர்களை வனவாசிகள் என்று விமர்சிக்கிறார். இந்த செயற்பாட்டை அவர் திருத்துவதாக இல்லை. லால் காந்த எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர். புத்த பகவான் வனத்தில் பிறந்தார். மேலும் சில தர்மங்கள் வனத்திலேயே தோற்றம் பெற்றுள்ளன.

ஏதாவதொன்று இடம்பெறும்போது நாங்கள் வனத்திலிருந்து வெளியில் வந்து நாட்டிலுள்ள நிலைமையை தெளிவுபடுத்திக் கொடுப்போம். அவ்வாறு கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் வனவாசிகளே.

இவர்கள் சகலரும் கொலைக்காரர்கள். கல்ல சாராயம் விற்றார்கள். இவற்றை நான் கூற வேண்டும் என்று நினைக்கவில்லை. இருந்தாலும் கூற வேண்டிய கட்டாயம். வீடுகளில் சூதாடினார்கள். இவர்களின் பின்னணி எங்களுக்குத் தெரியும்.

அவரின் பெயர் லால்காந்த என்பதல்ல. கென்டி கில என்பதே அவரின் பெயர். கண்டியிலும், மாத்தளையிலும் 800 வரையிலானவர்களை கொலை செய்தார். அவரின் அமைச்சு கடமையை முறையாக செய்யவில்லை. அவருக்கெதிராக வழக்கு தாக்க செய்ய இந்த விடயங்கள் போதுமானவை. அதற்காக சட்டத்தரணிகளும் தயாராகவே இருக்கிறார்கள்.

அதனால் இதில் புதுமையடைய வேண்டியது எதுவும் இல்லை. அரசியல் ஞானம் எமது நாட்டிலுள்ளவர்களுக்கு குறைவு. ஆளும், எதிர்த்தரப்புகளில் தடைசெய்யப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். அதனால், இவர்கள் மத்தியிலும் அந்த குணாதிசயம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பார்கள். பெளத்தத்துக்கு ஏற்படுத்தப்பட்ட இழிவுக்கு, லால் காந்த என்பவர் பொறுப்புள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை என்பதால் அவருக்கு இதுதொடர்பில் தெளிவுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.

அதனால், ஜனாதிபதி தொடர்ந்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதால், ஜனாதிபதி அவர்களிடம் சென்று இந்த தவறுக்காக மன்னிப்புக்கோர வேண்டும். முழு நாடும் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி அதனை செய்ய வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here