நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 13 பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வாழும் சுமார் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாலாவது நாளாகவும் இன்று (14) நடைபெற்றன.
இதற்கமைய அம்பகமுவ பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பன்மூர் பகுதியில் 425 பேருக்கும் விதுலிபுர தெற்கு 211 பேருக்கும், வெலிஓயா கிராம சேவகர் பகதியில் 1213 பேருக்கும் அம்பகமுவ கிழக்கு 281 பேருக்கும் அம்பகமுவ வடக்கு பகுதியில் 250 பேருக்கும், சமன்சிறிகம பகுதியில் 134 பேருக்குமாக அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2504 பேருக்கும்,
மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கிராம சேவகர் பகுதியில் மஸ்கெலியா மண்டபத்தில் 746 பேருக்கும்,
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் என்பீல்ட் வித்தியாலயத்தில், 836 பேருக்கும், வெஞ்சர் பகுதியில் 774 பேருக்கும், இன்ஜஸ்ரி பகுதியில் 735 பேருக்கும், கர்கஸ்வோல்ட் கிராம சேவகர் பகுதியில் 817 பேருக்குமாக மொத்தம் 1498 பேருக்கு குறித்த தடுப்பூ வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று பொது சுகாதார பிரிவுகளில் 4745 பேருக்கு இன்றைய தினம் மாத்திரம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தன.
இதே நேரம் தோட்டம் கிராமம் நகரம் ஆகிய பகுதிகளிலிருந்து முதியவர்கள் மிகவும் ஆர்வமாக இந்த தடுப்பூசிப்போட்டுக்கொள்வதற்காக வருகை தந்திருந்ததுடன் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்கான வேலைகளில் பொலிஸாரும் இரானுவமும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
குறித்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகளில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பறிசோதகர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், எம்புலன்ஸ் சாரதிகள், உதவியாளர்கள் குடும்ப நல உத்தியோகஸத்தர்கள் உட்பட பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் ஈடுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்