அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் வருகை இன்று மிகக் குறைவாகவே காணப்பட்டது. அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தச் செயலகத்தின் ஊழியர்களின் வருகையும் குறைவாகவே இருந்தது.
அதேவேளை இந்தச் செயலகத்தின் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்ற ஒப்பந்தக்காரர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு நிரந்தரமாக கணக்காளர் ஒருவரும் கிராம அபிவிருத்தி அதிகாரி ஒருவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நுவரெலியா மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோ. ஸ்ரீதரன்