கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்லை கெமினிதன் பகுதியில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பத்து வயது சிறுமியான யோகராஜா அனுஷ்கா உயிரிழந்துள்ளார்.இத்துயர சம்பவம் 05/11/2022 சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த சிறுமி பாடசாலை விட்டு தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தன் தாயை பார்த்து விட்டு திரும்பும் போது ஊரின் பிரதான ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் உடல் கொத்மலை பொலிசாரின் உதவியுடன் ஊர் மக்களால் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதோடு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்