அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

0
203

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளமின்றிய விடுமுறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தின் விதிகள் அர நிறுவனங்கள் சட்டபூர்வ அமைப்புகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் பொருந்துமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணிக்கும் அரச ஊழியர்கள் மாதாந்தம் குறிப்பிட்ட தொகையினை நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஊழியர் தற்காலிகமாக சேவையில் இருந்து விலகும் பட்சத்தில் குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு ஊழியர் ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில் மாத்திரமே விடுமுறை பரிசீலிக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த வெற்றிடத்திற்கு புதிதாக ஒருவரை இணைத்துக்கொள்வதற்காக சாத்தியம் இல்லை எனவும் குறித்த சுற்றுநிருபத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here