அரச நிதியினை பயன்படுத்தும் மாணவர்கள் பரீட்சையில் சிறந்த பேறுபேறுகளை பெற வேண்டும்.

0
199

மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிப்பதற்காக இன்று பெரும் நிதியினை அரசாங்கம் செலவு செய்கிறது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும். என ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி;.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர மாணவர்கள் செயல்முறை பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்காக ஹட்டன் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் டிக்கோயா நுண்கலைக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் வதிவிட செயலமர்வு கல்லூரியின் அதிபர் மூ.மூவேந்தன் தலைமையில் நேற்றும் இன்றும் 23,24, திகதிகளில் நடத்தப்பட்டது.அதில் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த செயலமர்வில் ஹட்டன் கல்வி வலயத்தில் உயர்தரத்தில் தமிழ் மொழி மூலம். நுண்கலை பிரிவில் நாடகம் சங்கீதம் நடனம்,மற்றும் மனைப்பொருளியல் பாடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த செயலமர்வில் மாணவர்கள் செயல்முறை பரீட்சையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாணவர்கள் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்,உடற்பயிற்சி விளையாட்டு தலைமைத்துவம், மகிழ்ச்சிக்கான செயல்பாடுகள் இதன் போது ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது போன்று சிங்கள மொழிமூல மாணவர்களுக்கான செயலமர்வு ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதிபர் மூ.மூவேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப இந்நிகழ்வில், ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here