இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட கார் ஒன்றின் மாதாந்த வாடகை சுமார் மூன்று இலட்சம் ரூபா என அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது. பத்து வருடங்களுக்கு மேல் பழைமையான அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 50,000 வாகனங்கள் கிடப்பில் இருப்பதாக தேசிய பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியின் அடிப்படையில்,
அவற்றைப் பராமரிப்பதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாககும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரச நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 90,000 என கூறப்படுகிறது. இந்த வாகனங்களின் பராமரிப்புக்காக, மூலதனச் செலவில் இருந்து ஏறக்குறைய பத்து பில்லியன் ரூபாவும், தொடர் செலவினங்களில் இருந்து ஏழு பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாறாக குத்தகை வசதியின் கீழ், வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அமைச்சுக்களிடம் இருந்து வாகனங்களை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட கார் ஒன்றின் மாதாந்த வாடகை சுமார் மூன்று இலட்சம் ரூபா என அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அரச அதிகாரிகளின் வாகன பாவனையை குறைக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பரிந்துரைத்துள்ளதாகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.