21வது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முழுமையாக அது நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அட்டனில் இன்று (16.06.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவே இலங்கைக்கு அதிகமான உதவிகளை வழங்கி வருவதால் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதில் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராக இருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டில் கடுமையான எரிபொருள் நெருக்கடி நிலவும் நிலையில், உலக நாடுகளை கருத்திற் கொள்ளாமல் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
(க.கிஷாந்தன்)