“அரசாங்கத்துக்குள் எவ்வித பிளவும் இல்லை. ஆட்சியமைப்பது குறித்து நாமலும், சஜித்தும் பகல் கனவு காண்கின்றனர்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது சுப்ரிம் செட் ரொக்கெட் விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் அணியுடன் இணைந்து சஜித் பிரேமதாச முற்போக்கான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கவுள்ளார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன.
இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,
” எதிரணிகளுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதாலேயே வாராந்தம் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. அரசாங்கத்துக்குள் எவ்வித பிளவும் இல்லை. எமது அணியில் ஒரு பிரிவை எடுத்து சஜித் ஆட்சி அமைப்பார் எனக் கூறப்படுவது பகல் கனவாகும்.” – என்று குறிப்பிட்டார்.