அரசுக்கு எதிராகவும், மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை பிரச்சினை தொடர்பாகவும் இராகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

0
170

நுவரெலியா, வலப்பனை கல்வி வலய பாடசாலைகளின் கல்வி சமூகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இராகலை பிரதேச பொது மக்கள் இணைந்து அரசுக்கு எதிராகவும், இன்று மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை பிரச்சினை தொடர்பாகவும் இராகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை முன்னெடுத்தனர்.இராகலை பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கூடிய கல்வி சமூகத்தினர், மற்றும் பொதுமக்கள் தலையில் கோ கோட்டா ஹோம் என கறுப்பு பட்டி அணிந்து, போலிங் அராஜகத்தை நிறுத்து, மக்கள் அதிகாரமே வெல்க, வக்கற்ற அரசே வாய் கிழிய பேசாதே, அரச அராஜகத்தை உடனே நிறுத்து, கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே திருப்பி கொடு, தள்ளாதே தள்ளாதே பட்டினி சாவுக்கு தள்ளாதே, கள்ளனே வெளியேறு காயப்பட்டவர்களின் கூக்குரல் இது, மந்திகள் ஆட்சி மந்த ஆட்சி, என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி போராட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

இப்போராட்ட பேரணி இராகலை முருகன் ஆலயத்தை வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குரல் எழுப்பினார்கள்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here