அரியவகை உயிரினமான நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் கண்டுபிடிப்பு

0
102

நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை(7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். (Smooth-coated Otter) இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது.

மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது. இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here