அரைகுறை வசதிகளுடன் சாவி கொத்து கையளிப்பு – நாம் விதைக்க மாற்றுதரப்பு அறுவடை.

0
183

“மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள சிலருக்கு ‘சாவி கொத்து’ கையளிக்கப்பட்டிருந்தாலும், சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் தனி வீட்டில்கூட சுதந்திரமாக, நிம்மதியாக வாழமுடியாத நிலைமை இன்று பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின்போதே மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தனிவீட்டுத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டது. வீட்டுரிமை மற்றும் காணி உரிமை என சகலவித உரிமைகளையும் பயனாளிகள் அடையும்வகையில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன.

அதேபோல் நான்கு வருடங்கள் என்ற குறுகில காலப்பகுதிக்குள் மேலும் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத் திட்டமானது, ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சி உள்ளிட்ட சில விடயங்களால் முழுமைப்படுத்தமுடியாமல்போனது. அதன்பின்னர் ஆட்சிமாற்றமும் ஏற்பட்டது.

ஆட்சிமாறினாலும் அரச நிர்வாகப் பொறிமுறை என்பது மாறாது. எனவே, முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்து முழுமைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சிக்குவரும் தரப்புக்கு இருக்கின்றது.

அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் இருந்த வீடுகள், முழுமைப்படுத்தப்பட்டு, வீடு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என நம்பினோம். பெரும்பாலான வீடுகளுக்கு இந்த ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவில்லை. முழுமைப்படுத்தப்படாமலேயே வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

நாம் விதைக்க அதனை மாற்றுதரப்பு அறுவடை செய்தாலும் அதன்மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும். ஆனால் முழுமைப்படுத்தப்படாமலேயே வீடுகள் கையளிக்கப்பட்டு ‘சாவி கொத்து’ அரசியல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here