அறுகம் விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவின் செயல் இயக்குநர் ஏஎஸ்பி பிரபாத் விதானகம தெரிவித்தார்.
வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டினர் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அறுகம் விரிகுடாவில் பெரும்பாலும் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட அடையாளப் பலகைகள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி சுற்றுலாப் பயணி ஒருவர் பகிர்ந்து கொண்ட காணொளி வைரலானது.
இந்நிலையில், இஸ்ரேலிய பார்வையாளர்கள் உட்பட அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் இலங்கையில் தங்கியிருக்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.