அறுபதாவது ஆண்டில் தடம் பதித்திருக்கும் தெல்தோட்டை மலைமகள் கல்லூரி !

0
177

கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேசத்திலே அழகிய மலைகளால் சூழப்பட்ட இடத்திலே அமையப்பட்டிருக்கும் க/மலைமகள் இந்து மத்திய கல்லூரி 60வது அகவையில் வைரவிழா காண்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் சமூக நலனில் அதிகம் நாட்டம் கொண்ட வர்த்தகரான திரு.பி.ஆர்.டி கருப்பையா பிள்ளை அவர்கள் தற்போது இக் கல்லூரி அமைந்துள்ள காணியை நன் கொடையாக வழங்கினார்.இவரது அர்ப்பணிப்பு இப்பிரதேச வாழ் தமிழ் மக்களின் கல்வி கண் ஊற்றெடுப்பதற்கு துணை நின்றது.இச் சந்தர்ப்பத்தில் அவர் செய்த சேவையை நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களாக உள்ளோம் அத்தோடு திரு.நடேசன் அவர்களும் இக்காணியின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி கல்வி பணிக்கு தொண்டாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற காணியில் தெல்தோட்டை பிரதேசத்தில் வாழும் தமிழ் சமூகத்தினரின் அயராத முயற்சியினாலும் உழைப்பினாலும் ஓர் கட்டிடம் உறுவாக்கப்பட்டனர்.இந்த கட்டிடம் 29.05.1961இல் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.இவ்வாறு தன்னுடைய பிறப்பினை ஆரம்பித்த இக் கல்லூரியின் முதலாவது அதிபராக 1961-1965 வரையான காலப்பகுதில் .அராலியூர் சுந்தரலிங்கம் என்பவர் கடமையாற்றியுள்ளார் இக் காலப்பகுதியில் இப் பிரதேச கல்வி வளர்ச்சிக்காக அதிக அக்கரையுடன் இவ் அதிபர் செயற்பட்டுள்ளார்.

1965ம் ஆண்டுக்கு பிறகு இக் கல்லூரிக்கு வருகை தந்த அதிபர்கள் இக் கல்லூரியின் வளர்ச்சிற்கு தங்களது சேவைகளை திறம்பட செய்துள்ளதோடு அதிகமான கல்விமான்களையும் உறுவாக்கி சென்றுள்ளனர். தற்பொழுது இந்தக் கல்லூரி 1000 பாடசாலை வேளை திட்டத்தின் கீழ் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்று பெறுமை வகிக்கின்றது. அத்தோடு இக் கல்லூரியின் மாணவர்கள் வருடம் வருடம் கல்லூரியிலிருந்து ஒவ்வொரு முறையும் பல்கலைக்கழகம் சென்று கொண்டேஇருக்கின்றனர்.இவ்வாறான சாதனைகளோடு இக் கல்லூரி அதிபர்கள்,ஆசிரியர்கள்,சட்டத்தரணி,
கலாநிதி, விரிவுரையாளர்கள்,
அரசியல்வாதிகள் என பலரையும் உறுவாக்கியுள்ளது.

இக் கல்லூரியிலிருந்து கல்வி கற்று விலகி சென்ற பழைய மாணவர்களும் இது வரைக்காலமும் கல்லூரியோடு சஙகமித்து கொண்டே வருகின்றனர் அத்தோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்,கல்லூரியின் வளர்ச்சிக்கும் தங்களின் ஒத்துழைப்பை வழங்கி கொண்டே வருகின்றனர்.

ஆண்டு அறுபதை அடைந்திருக்கும் என் கல்லூரி தாய்க்கு இவ் வைரவிழா காணும் நாளில் வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி பெருமையடைவதோடு தன் நோக்கத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் என் கல்லூரி தாய்க்கு வைரவிழா வாழ்த்துக் கூறி நிற்கிறேன்.

என்றும் மலைமகள் தாய்க்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்று கல்லூரித் தாயை தேசிய பாடசாலையாக மலையக மண்ணில் தடம் பதிக்க/நிலை நிறுத்த என் பணி தொடருமென இவ் விழா காணும் நாளில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

தாயே! உன் தொண்டினை பணியாய் பார்த்து சேவையாய்/தேவையாய் எண்ணும் நாம்இஅது உன்னால் எதிர் காலத்தில் மேலும் உச்சம் தொட்டு இச் சமூகம் மலைமகள் தாயால் பெருமைபட மலைமகளின் மகனாகிய இந்த அடியேனின்/பக்தனின் அன்பு கலந்த வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றேன்.

திரு.ந.ஜெகதீசன் (சமாதான நீதவான்)

செயலாளர்

பழைய மாணவர் சங்கம்

க/மலைமகள் இந்து மத்திய கல்லூரி.

தெல்தோட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here