வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூறை உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீட்டிலிருந்த 8 வயது சிறுமி, தீக்கிரையாகியுள்ளார்.
மாத்தறை − வெலிகம − வெவேகெதரவத்த பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டிலிருந்த இருவர் தீயில் இருந்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டருக்கோ, எரிவாயு அடுப்புக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கும் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.