எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடாத்தி முடிக்க அரசாங்கம் அவசர தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளதாக, அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதும், தற்போது நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
அதன்படியே ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் நடாத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என நம்பப்படும் நிலையிலேயே, அதர்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தி முடிக்க வேண்டும் என அரசாங்கம் கருதியுள்ளதாக கூறப்படுகிறது.