ஆசிய அபிவிருத்தி வங்கியினால் சுகாதார சேவைக்கு மேலும் 7 வாகனங்கள் கையளிப்பு

0
42

சுகாதார சேவைகளில் பயன்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்திற்கு நேற்று ஏழு கேப் ரக வாகனங்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன்,அதிகாரப்பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் வளாகத்தில் வாகனத்தை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வாகனங்களை சுகாதார பிரிவிடம் ஒப்படைத்தார்.

ஒவ்வொரு வாகனமும் ரூ. 22 மில்லியன் மதிப்புடையது.

வரல்லகம மற்றும் கங்காவத கோரலே (கண்டி மாவட்டம்), ஹொரொவபத்தான (அனுராதபுரம் மாவட்டம்), மஹியங்கனை மற்றும் பண்டாரவளை (பதுளை மாவட்டம்), நிவிதிகல (ரத்னபுர மாவட்டம்) ஆகிய இடங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH) அலுவலகங்களுக்கும், கொழும்பு பிரிவிற்கும் இந்த வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த முன்னர் இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார அமைப்பு 45 வாகனங்களை பெற்று கொண்டது. இவற்றில், 38 வாகனங்கள் 2022 ஜனவரியில் விநியோகிக்கப்பட்டன, மீதமுள்ள ஏழு வாகனங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்களாகளான சாமிக கமகே, சுனில் கலகம மற்றும் ஜனக கித்சிறி குணவர்தன, பிரதி பணிப்பாளர் ஜெனரல் தினிபிரியா ஹேரத், இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார அமைப்புகள் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் வைத்தியர் அனில் திசாநாயக்க மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here