அண்மையில் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டை நீக்கியதுடன் டொலரின் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயற்படும் நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளதாகவும், இந்த நிலை நீடிக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
வட்டி விகிதங்களை குறைத்தமை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியமை என்பன இந்த நிலைக்கு காரணமென புளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டின் முதல் அரையாண்டி ஆசியாவில் சிறந்த நாணயமாக இலங்கை ரூபாய் செயற்பட்டதாக புளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகரான பெறுமதியில் இலங்கை ரூபாய் தொடர்ந்தும் 14வது முறையாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இந்த மாதத்தில் மட்டும் ஆறு வீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை ரூபாய் ஆசியாவின் சிறந்த செயல்திறனாக இருந்ததுடன், அதன் செயல்திறனில் இருந்து தற்போது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Natixis SAஇன் படி, இந்த ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி மேலும் எட்டு வீதம் வலுவிழந்து 355 ரூபாயாக இருக்கும் என புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்மையில் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டை நீக்கியதுடன் டொலரின் தேவையும் அதிகரித்து வருகிறது.
அத்துடன், வேகமான பணவீக்கத்திற்கு மத்தியில் இலங்கை மத்திய வங்கி இந்த மாத தொடக்கத்தில் அதன் முக்கிய வட்டி விகிதத்தை குறைத்திருந்தது.
இந்நிலையில், “பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைவதால் வர்த்தக இருப்பு மேலும் எதிர்மறையாக இருக்கும்” என்று ஹாங்காங்கில் உள்ள Natixis SA இன் பொருளாதார நிபுணர் Haoxin Mu தெரிவித்துள்ளார்.