ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொன்றை வேந்தன் போட்டிகள் நேற்று (02) திகதி நடைபெற்றன.

கடந்த 09 வருட காலமாக பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் அறநெறி தொடர்பான பணியினை குறித்த பாடசாலை முன்னெடுத்து வருகிறது. ஹட்டன் பிரதேசத்திலுள்ள சுமார் 30 அறநெறி பாடசாலைகளையும் ஒருகிணைப்பு செய்கின்ற பணியினையும் குறித்த பாடசாலையே மேற்கொண்டு வருவதாக அறநெறி பாடசாலையின் இணைப்பாளரும் நுவரெலியா கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளருமான விஸ்வநாதன் சாந்தகுமார் தெரிவித்தார் குறித்த அறிநெறி பாடசாலையில் கடந்த வாரம் சித்திர போட்டகள் நடைபெற்றன. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கே.சுந்தரலிங்கம்.



