ஆந்திராவின் விவசாய அமைச்சர் ஸ்ரீ கண்ணா பாபு அவர்களின் அழைப்பின் பேரில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் அமைச்சர் ஸ்ரீ கண்ணா பாபு அவர்களையும்,அரச உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரைடினர்.
ஆந்திராவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களான அரிசி கோதுமை,சீனி, மிளகாய் போன்ற பொருட்கள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் இலங்கையில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இறப்பர், தேயிலை, சிறுதானியப் பொருட்கள் போன்ற உற்பத்தி பொருட்களையும் பரிமாற்றுக் கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் இலங்கை மற்றும் ஆந்திராவின் நினைவு சின்னங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.