ஆமி சுரங்க கைது

0
40
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹோமாகம ஹந்தயா என்பவரின் துப்பாக்கிதாரியாக செயல்பட்ட  நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக  மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஆர்மி சுரங்க என்ற​ழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரான புத்திக லக்மால் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது  உள்ளூரில் தயாரிக்கப்பட்ட  போரு 12 ரக துப்பாக்கி மற்றும் 3  துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று ஹன்வெல்ல, பஹத்கம பகுதியில் ஒருவரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேக நபர் துன்னான விகாரைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்த பையில் துப்பாக்கி இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்ட நிலையில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here