பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றுவரும் கூட்டத்தொடரின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பொது பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் 40ஆவது அத்தியாயத்தின் பிரிவு 12இன் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.