ஆர்ப்பாட்டத்தில் உடைக்கப்பட்ட டி.ஏ ராஜபக்ஷ சிலை மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது!

0
161

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது தங்காலையில் இருந்த டி.ஏ ராஜபக்ஷ சிலை கிழே இழுத்து உடைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புனரமைக்கபட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் தந்தை ஆவர்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.ஏ. ராஜபக்சவின் சிலை உடைக்கப்பட்டது.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டி.ஏ ராஜபக்ஷவின் 55 நினைவு நினத்தை முன்னிட்டு சிலை மீண்டும் புனரமைக்கபட்டு தங்காலையில் அதன் அசல் இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here