அமெரிக்கா அரச நிர்வாகம் முடக்கம் தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருடன் விரைவில் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் ட்ரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரச துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 இலட்சம் அரச ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர்.
அதே நேரத்தில், 7.30 இலட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
அரச நிர்வாகம் முடக்கம், 6ஆவது வாரத்தில் நுழைந்து, அமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஊதியமின்றி தவிக்கும் நிலையில் உள்ளனர்.
இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது:
மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் வரி சலுகைகளை நீடிக்க கோரும் ஜனநாயகக் கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை. குடியரசுக் கட்சியினர் பணி நிறுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும்பாலான சட்டங்களுக்கு 60 செனட் வாக்குகள் தேவைப்படும் முறையை இரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Image – Times Now




