ஆறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா

0
149

ஆறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்ற இப்பூஜைக்கு கடந்த ஒரு வருட காலமாக சபரிமலை மாலிகைப்புரம் மேல்சாந்தியில் ஐயன் ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்து வந்த உயர்திரு பிரம்மஸ்ரீ எம்.என். ரெஜிகுமார் நம்பூதிரி (கேரளா-இந்தியா), உயர்திரு பிரம்மஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி (கேரளா-இந்தியா) ஆகியோரால் விசேட பூஜையும் இடம்பெற்றது.

மேலும் இப்பெருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக விசேட சொற்பொலிவாளர் ஸ்ரீ “மஹாதாஸ்த்ரு ப்ரியதாஸன்” ஸ்ரீ.வீ.அரவிந்த் ஸூப்ரமண்யம் (கோவை-தமிழ்நாடு) அவர்களின் சொற்பொலிவும், தென்னிந்தியாவின் பிரபல பக்தி பாடகர் அருளிசை ஸ்ரீஹரி அவர்களின் பஜனை கச்சேரியும் இடம்பெற்றது.

இந்த பெருவிழாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், இலங்கை வாழ் ஐயப்ப குருசுவாமிமார்கள், சுவாமிமார்கள்,பக்த மெய்யடியார்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here