ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு

0
180

கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் 06.11.2022 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தவிசாளர் பி.ராஜதுரை மற்றும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here